"எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறாரோ??..." 'ரஹானே'வுக்கு வேற லெவலில் 'ஐடியா' கொடுத்த முன்னாள் 'வீரர்'... வைரலாகும் 'Decoding' பிளான்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக தோல்வியை சந்தித்திருந்தது.

"எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறாரோ??..." 'ரஹானே'வுக்கு வேற லெவலில் 'ஐடியா' கொடுத்த முன்னாள் 'வீரர்'... வைரலாகும் 'Decoding' பிளான்!!!

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவான நிலையில், 90 ரன்கள் இலக்கை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி எட்டிப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், முதல் டெஸ்டில் ராகுல், கில் ஆகியோரை அணியில் எடுக்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆடமாட்டார் என்பதால் இந்திய அணியை மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே வழிநடத்தவுள்ளார்.

கோலி இல்லாதது, பேட்டிங் துறையில் மட்டுமில்லாமல் அணியின் தலைமையிலும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதனிடையே, இந்திய அணியின் புதிய கேப்டன் ரஹானேவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், மறைமுகமாக ஐடியா ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

 

பதினாறு வரிகளில் ஒவ்வொரு வார்த்தையாக ஜாஃபர் குறிப்பிட்டுள்ள நிலையில், இதில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் முதல் எழுத்தை வரிசையாக ஒன்றிணைக்கும் போது சுப்மன் கில் மற்றும் ராகுலை அடுத்த போட்டியில் களமிறக்க வேண்டும் என்ற அர்த்தம் ஒளிந்துள்ளது. அடுத்த போட்டியில் ராகுல், கில் ஆகியோரை களமிறக்க வேண்டும் என ரஹானேவுக்கு வாசிம் ஜாஃபர் மறைமுகமாக ஆலோசனையளித்துள்ளார். இதனை, ரசிகர்கள் பலர் கண்டுபிடித்து அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்