‘உலக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொளி’.. பங்களாதேஷ் பேட்டிங் ஆலோசகரான முன்னாள் இந்திய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வங்கதேச அணி 9 போட்டிகளில் 5 - தோல்வியும், 3 -ல் வெற்றியும் பெற்றது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனை அடுத்து வங்கதேச அணி நிர்வாகம் அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று பயிற்சியாளாரை நியமிப்பது குறித்து அந்த அணி ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேச அணி, அங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் இத்தொடருக்கான பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரை வங்கதேச அணி நியமித்துள்ளது. இவர் இந்திய அணியின் சார்பாக 31 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளாராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் செம்பக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.