"இது தான்யா அவரோட 'குணம்'.. அவரு எப்பவுமே வேற 'லெவல்' தான்.." 'தோனி'யின் செயலால் ஆச்சரியப்பட்ட 'முன்னாள்' வீரர்!.. வைரல் 'ட்வீட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம், மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் மோசமாக அச்சுறுத்தி வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியனாதால், ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து, மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அனைவளர்க்கும் நெகடிவ் என முடிவுகள் வந்தது. இந்நிலையில், சென்னை அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் முதலிலும், அதன் பிறகு இந்திய வீரர்களும் பத்திரமாக, தங்களது வீடுகளுக்கு சென்றடைந்த பின்னர் தான், கடைசி ஆளாக நான் கிளம்புவேன் என அந்த அணியின் கேப்டன் தோனி (Dhoni) கூறியதாக, சிஎஸ்கேவைச் சேர்ந்த ஒருவர் நேற்று கூறியிருந்தார்.
அணியின் கேப்டனாக, மற்ற வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தான் கடைசி ஆளாக வீட்டிற்கு செல்லலாம் என்ற தோனியின் முடிவு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான வாசிம் ஜாபர் (Wasim Jaffer), தோனியின் செயல் குறித்து ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
இதில், தோனி குறித்த செய்தியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ஜாபர், 'கடைசி வரை அங்கேயே தங்கி இருந்த வேலையை முடிப்பது. இது தான் எம்.எஸ். தோனியின் குணம்' என தோனியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து, வாசிம் ஜாபர் ட்வீட் செய்துள்ளார்.
Staying there till the end and getting the job done, just @msdhoni things👏 #ipl2021 pic.twitter.com/7hJUCLCId0
— Wasim Jaffer (@WasimJaffer14) May 6, 2021
இந்த ட்வீட், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்