"'இந்தியா'வுக்கு அந்த 'டீம்' எவ்ளோ பெட்டர்..." சீண்டிய 'வாகன்'... வார்த்தை போரில் ஈடுபட்ட 'வாசிம் ஜாஃபர்'... பரபரப்பு 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நேற்று நடைபெற்ற முதல் டி 20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களே எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, 16 ஆவது ஓவரில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியை விமர்சனம் செய்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். 'இந்திய கிரிக்கெட் அணியை விட, மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி' என வாகன் குறிப்பிட்டிருந்தார்.
The @mipaltan are a better T20 team than @BCCI !!! #JustSaying #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 12, 2021
ஒரே ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை வைத்து, ஐபிஎல் அணியான மும்பையுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்த வாகனை பதிவிற்கு பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன் வைத்தனர்.
அது மட்டுமில்லாமல், இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ஒரு படி மேலே சென்று, 'நான்கு வெளிநாட்டு வீரர்களை அணியில் ஆட வைக்க அனைத்து அணிகளும் அதிர்ஷ்டம் இல்லாதவை மைக்கேல்' என கூறியிருந்தார். ஐபிஎல் தொடரில் ஒரு அணியில், நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவதை தான் ஜாஃபர் அப்படி குறிப்பிட்டிருந்தார்.
Not all teams are lucky enough to play four overseas players Michael😏 #INDvENG https://t.co/sTmGJLrNFt
— Wasim Jaffer (@WasimJaffer14) March 12, 2021
மேலும், இத்துடன் இந்த வார்த்தை போரை விடாத வாகன், ஜாஃபரின் கருத்திற்கு, 'லார்ட்ஸ் மைதானத்தில் நான் உங்களை அவுட் செய்தததில் இருந்து இன்னும் மீளவில்லையா?' என நக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த கருத்திற்கு, ஜாஃபர் மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் வார்த்தை ஒன்றை மறைமுகமாக குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
Have you still not recovered from me getting you out at Lords !?? https://t.co/K1Us0ci7Yo
— Michael Vaughan (@MichaelVaughan) March 12, 2021
That's just Life's Amazing Memories Eh, Michael 🙂 #INDvENG https://t.co/SFT9BVU0mg
— Wasim Jaffer (@WasimJaffer14) March 13, 2021
கடந்த டெஸ்ட் தொடரில், பிட்ச் மீது மோசமான விமர்சனம் வைத்த வாகன், தற்போது டி 20 தொடர் ஆரம்பித்ததும், மீண்டும் தேவையில்லாமல் பேசுவதை ஆரம்பித்துள்ளார். இதனால், இரண்டு முன்னாள் வீரர்கள் ட்விட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்