என்ன ஷாட்-ப்பா இது ? வாஷிங்டன் சுந்தரின் வித்தியாசமான ஷாட்.. குழம்பி நின்ன நியூஸி வீரர்கள்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த ஒரு ஷாட் பலரையும் பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

என்ன ஷாட்-ப்பா இது ? வாஷிங்டன் சுந்தரின் வித்தியாசமான ஷாட்.. குழம்பி நின்ன நியூஸி வீரர்கள்.. வைரலாகும் வீடியோ..!

Also Read | "கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை T20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகளை கொண்டுள்ள T20 தொடரை 1-0 என இந்தியா ஏற்கனவே வென்றிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்கியுள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணிவீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். ஆரம்பத்திலேயே தவான் - கில் இணை பொறுமையாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தியது. தவான் 72 ரன்னிலும், கில் 50 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து, களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Washington Sundar unthinkable shot in 1st ODI vs New Zealand

இறுதியில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் வீசி இந்தியாவை 306 ரன்கள் குவிக்க உதவினார். பேட்டிங் செய்கையில், மாட் ஹென்றி ஓவரை சந்தித்தார் சுந்தர். அப்போது, வைட் லைனில் ஹென்றி பந்தை வீச, அதனை நகர்ந்து சென்று ஸ்கூப் ஆடினார் சுந்தர். இதனால் அந்த பந்து ஷார்ட் - ஃபைன் -ல் நின்று கொண்டிருந்த வீரரை தாண்டிச் சென்று பவுண்டரிக்கு பறந்தது. இதனை கண்ட நியூசி வீரர்கள் அப்படியே திகைத்துப்போய்விட்டனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "நீங்க வந்தா மட்டும் போதும்".. குடியேறும் மக்களுக்கு ₹25 லட்சம் கொடுக்க ரெடியாக இருக்கும் நாடு..?? கல்யாணமே செஞ்சு வைக்கிறாங்களா..?

CRICKET, WASHINGTON SUNDAR, 1ST ODI, 1ST ODI VS NEW ZEALAND

மற்ற செய்திகள்