"என்னோட 'அப்பா' அவங்கள சிறப்பா பாத்துப்பாரு..." 'முன்னாள்' வீரர் போட்ட 'ட்வீட்'... தரமான 'கமெண்ட்' போட்ட 'வாஷிங்டன் சுந்தர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி, 3 - 1 என கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

"என்னோட 'அப்பா' அவங்கள சிறப்பா பாத்துப்பாரு..." 'முன்னாள்' வீரர் போட்ட 'ட்வீட்'... தரமான 'கமெண்ட்' போட்ட 'வாஷிங்டன் சுந்தர்'!!

முன்னதாக, இந்த தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இந்நிலையில், ரிஷப் பண்ட் மாற்றம் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி, இந்திய அணியை மீட்டனர்.

washington sundar reacts to wasim jaffer's hilarious meme

ரிஷப் பண்ட் சதமடித்து அவுட்டானார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் இறுதி வரை களத்தில் இருந்த போதும், அவரால் சதமடிக்க முடியவில்லை. இறுதி விக்கெட்டுகள் வேகமாக சரிந்த நிலையில், 96 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில், தனது முதல் சதத்தை வாஷிங்டன் சுந்தர் இழந்த நிலையில், அவரது தந்தை, கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததை விமர்சனம் செய்திருந்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

washington sundar reacts to wasim jaffer's hilarious meme

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், வாஷிங்டன் சுந்தர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்த போது, அனைவரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். ஆனால், அவரது தந்தை மட்டும், சுந்தர் சதமடித்திருக்கலாம் என்றும், அவர் அதற்கு முன்பு ஆட்டமிழந்தது, தனக்கு ஏமாற்றமாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.

washington sundar reacts to wasim jaffer's hilarious meme

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், சுந்தர் 96 ரன்களில் அவுட்டானதும், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், வாஷிங்டன் சுந்தரின் தந்தையை, அக்சர் படேல், இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோர் சந்திக்கும் போது, இப்படி தான் அவர்கள் இருப்பார்கள்' என மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

 

இதற்கு தற்போது கமெண்ட் செய்த வாஷிங்டன் சுந்தர், 'நன்றி. எனது தந்தை அவர்கள் மூன்று பேரையும் அடுத்த தடவை பார்க்கும் போது, பிரியாணி மற்றும் அல்வா கொடுத்து கவனித்துக் கொள்வார்' என நக்கலாக தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலும், தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்