"ஊரே உன்ன பாராட்டுது... ஆனாலும் இந்த 'அப்பா'க்கு சின்ன 'வருத்தம்'பா..." ஏமாற்றமடைந்த 'வாஷிங்டன்' சுந்தர் 'தந்தை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளையுடன் முடிவடையவுள்ளது.
இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல 324 ரன்கள் தேவை. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புள்ள நிலையில், யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தவித்து கொண்டிருந்த போது கைகோர்த்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்ட உதவினர். வாஷிங்டன் சுந்தர், தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 62 ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் ஆல் ரவுண்டர் ஆட்டத்திறனை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், அவரின் தந்தை சுந்தர், தனது மகனைப் பாராட்டியும், ஆனால் அதே வேளையில் சிறிதாக அவர் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'தனது அறிமுக போட்டியிலேயே அவர் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது சற்று ஏமாற்றமாக உள்ளது. சிராஜ் ஆட வந்த போது சுந்தர் பவுண்டரிகளை அடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் ரன்களுடன் மிக குறைவாகவே பின்தங்கி இருந்ததால் அவர் அப்படி ஆடியிருப்பார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவருடன் நான் தினமும் பேசி வருகிறேன். எப்போது உனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது நீ பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தேன். அவரும் நிச்சயமாக நான் செய்கிறேன் என தெரிவித்தார்.
முதல் தர போட்டிகளில் தனது 14 வயதிலேயே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வாஷிங்டன் சுந்தர் சதமடித்து சாதனை படைத்துள்ளார்' என சுந்தர் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்