VIDEO: சதத்தை தவறவிட்ட சோகத்துல கூட மனுசன் மாஸ் பண்றாரே.. சிறுவனுக்கு ‘வார்னர்’ கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சதத்தை தவறவிட்ட சோகத்திலும் டேவிட் வார்னர் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

VIDEO: சதத்தை தவறவிட்ட சோகத்துல கூட மனுசன் மாஸ் பண்றாரே.. சிறுவனுக்கு ‘வார்னர்’ கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹப்பா மைதானத்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Warner makes young fan's day with heartwarming gesture

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (16.12.2021) ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்கஸ் ஹாரிஸ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினார். இதில் மார்க்கஸ் ஹாரிஸ் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

Warner makes young fan's day with heartwarming gesture

இதனை அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே உடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது 95 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ந்தார். அதனால் 5 ரன்களில் சதத்தை தவறவிட்டடார்.

சதத்தை தவறவிட்டு சோகமாக வெளியேறிய வார்னர், அப்போது மைதானத்தில் இருந்த சிறுவனுக்கு தனது கிளவுஸை பரிசாகக் கொடுத்துவிட்டு சென்றார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் 94 ரன்களில் ஆட்டமிழந்து டேவிட் வார்னர் சதத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்