VIDEO: ‘எப்படி இருந்த மனுசன்’!.. ‘கடைசியில அவரை இப்படி பார்க்க வச்சிட்டீங்களே’.. உடைந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் ‘வார்னர்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர் வார்னரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகள் ஒருபுறம் இருக்க, நட்சத்திர ஆட்டக்காரரான தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இது ஹைதராபாத் அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (28.04.2021) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போட்டி முடிந்தபின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் எனக் கூறினார். மெதுவாக பேட்டிங் செய்து தான் ரன் சேர்க்க தவறியதாக வார்னர் கூறியிருந்தார்.
இதனை அடுத்து திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் விடுவிக்கப்படுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியக்கப்பட்டார். புதிய மாற்றத்துடன் அடுத்த நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடியது.
ஆனால் அப்போட்டியில் விளையாட ப்ளேயின் லெவனில் வார்னரின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் அந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது.
David warner having a race for drinks 😂😂🥺#IPL2020 #SRHvRR #srh #DavidWarner pic.twitter.com/jEQPs0kbpD
— Trollmama_ (@Trollmama3) May 2, 2021
இந்த நிலையில் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், வீரர்களுக்கு தண்ணீர், கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் செல்லும் வேலையை வார்னர் செய்துக்கொண்டிருந்தார். அப்போது சக வீரர் ஒருவருடன் தண்ணீர் பாட்டிலை எடுக்க விளையாட்டாக சண்டையிட்டு வார்னர் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஒரு காலத்தில் எப்படி இருந்த வீரரை இதுபோல் பார்க்கும்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்