'அந்த வலி சாதாரணமானது இல்ல'...அது எனக்கு மட்டும் தான் தெரியும்...'பிரபல வீரர்' உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு இடம் பெறாமல் போனதன் வலி,எனக்கு தெரியும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பைக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதில் முக்கியமாக ரிஷப் பன்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், தினேஷ் கார்த்திக் அனுபவ வீரர் என்ற அடிப்படையில் அதனை பலரும் ஏற்று கொண்டார்கள்.ஆனால் 4வது இடத்திற்கான போட்டியில்,அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது,தான் பல தரப்பிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இதனிடையே அம்பத்தி ராயுடுவே விஜய் சங்கரின் தேர்வை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக கருத்து தெரிவித்தார்.இதற்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து இருந்தார்கள்.இதனிடையே உலகக் கோப்பைக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறாதது குறித்து,இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.''நிச்சயமாக அம்பத்தி ராயுடுவிற்கு இது மிக பெரிய ஏமாற்றம் தான்.ஏனெனில் அவர் அணியில் இடம் பிடிப்பார் என நானும் கருதினேன்.அதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்றே எனக்கு தோன்றியது.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு அணியில் 4வது வீரராக பேட்டிங் செய்தார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார்.அந்தத் தொடரில் அதிக ரன்களையும் எடுத்தார்.அதிகமான அனுபவம் அவருக்கு இருந்தும் ஏன் அவரை எடுக்கவில்லை என்பது நிச்சயமாக ஆச்சரியமான ஒன்றகவே இருக்கிறது.இது மிகவும் வலி நிறைந்த தருணம்.அந்த வலியை நானும் 2003ம் ஆண்டில் உணர்ந்தேன்.சர்வேதேச வீரர்கள் இது போன்ற வலியிலிருந்து கடந்து வருவார்கள்.நிச்சயம் அம்பத்தி ராயுடுவும் கடந்து வருவார்'' என தெரிவித்தார்.
2003ம் உலகக் கோப்பையில் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. 15 பேர் கொண்ட அந்த அணியில் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பதில் தினேஷ் மோங்கியா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிவரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.