‘வீரு பாய், ப்ளீஸ் என் சம்பளத்தை உயர்த்தி தர சொல்றீங்களா?’.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததும் சோகமாக கேட்ட வீரர்.. சேவாக் பகிர்ந்த ‘உருக்கமான’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹாட்ரிக் விக்கெட் எடுத்தபின் வீரர் ஒருவர் தனது சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என உருக்கமாக கேட்டதாக சேவாக் பகிர்ந்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, இஷான் கிஷன் என மும்பை அணியின் முக்கிய வீரர்களை அவுட்டாக்கினார். இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் அமித் மிஸ்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் Cricbuzz சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், அமித் மிஸ்ரா குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘அவர் (அமித் மிஸ்ரா) எல்லோரிடமும் அமைதியாக, சஜகமாக பழகக் கூடிய வீரர். சீக்கிரம் அனைவருடனும் நெருக்கமாகி விடுவார். அதனால் அணியில் உள்ள எல்லோருக்கும் மிகவும் பிடித்த வீரராக இருப்பார். அவரது ஓவரில் ரன்கள் சென்றால் ஒவ்வொரு வீரரும் வருத்தமடைவார்கள், அதேபோல் அவர் விக்கெட் எடுத்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள்’ என சேவாக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஒருமுறை அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததும், உனக்கு விருப்பப்பட்டதை கேள்? என கூறினேன். அதற்கு அவர், வீரு பாய், ப்ளீஸ் என் சம்பளத்தை உயர்த்தி தர சொல்றீங்களா? என சோகமாக கேட்டார்’ என சேவாக் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அவர் அற்புதமாக பந்து வீசினார். அதனால் இந்த சீசனில் சிறந்த பவுலராக இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்த வீரர் அவர்தான். அமித் மிஸ்ரா ஓவரில் மட்டும் ரோஹித் ஷர்மா கொஞ்சம் கவனமாக விளையாடி இருந்தால் 60-70 ரன்கள் எடுத்திருக்கலாம்’ என சேவாக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்