ஒரே ஒரு 'ட்வீட்' தான்... இவ்ளோ நாள் 'கிண்டல்' பண்ண வாய் எல்லாம் 'Close'... 'ரெண்டே' வரியில் தரமான பதிலடி கொடுத்த 'சேவாக்'!!.. "இதுக்கு அப்புறமும் பேசுவீங்க!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஒரே ஒரு 'ட்வீட்' தான்... இவ்ளோ நாள் 'கிண்டல்' பண்ண வாய் எல்லாம் 'Close'... 'ரெண்டே' வரியில் தரமான பதிலடி கொடுத்த 'சேவாக்'!!.. "இதுக்கு அப்புறமும் பேசுவீங்க!"

இந்நிலையில், இந்திய அணி பெற்றுள்ள வெற்றி குறித்து சேவாக் செய்துள்ள ட்வீட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 205 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தது. அதன் பிறகு ஆடிய இந்திய அணி, 365 ரன்கள் எடுத்திருந்தது.

160 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 135 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்திருந்த நிலையில், அகமதாபாத் மைதானம் தரமற்ற வகையில் தயார் செய்யப்பட்டதாகவும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாகவும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்திருந்தனர்.

இதிலும், வாகன் நான்காவது போட்டிக்கான மைதானம் இப்படி தான் இருக்கும் என விவசாய நிலத்தின் புகைப்படங்களை பதிவிட்டு ஒரு படி மேலே சென்று, கிண்டல் செய்திருந்தார். ஆனால், தற்போது நடந்து முடிந்த நான்காவது போட்டியில், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்த போதும், இங்கிலாந்து அணி ஆட்டமிழந்து இந்திய அணியின் பந்து வீச்சிற்கு அடங்கியது.

இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் மூளையின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'அற்புதமாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணி தோற்கவில்லை. இங்கு தான் தோற்று விட்டது' என குறிப்பிட்டுள்ளார்.

 

அதாவது, பிட்ச் பற்றி குறைகள் கூறாமல், ஒழுங்காக மூளையை பயன்படுத்தி ஆடியிருந்தால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு சேவாக் அப்படி விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து, இந்திய பிட்ச்சை பல விதமாக நக்கல் மற்றும் நையாண்டி செய்து வந்த வாகன் உள்ளிட்ட இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களுக்கு, ஒரே ஒரு ட்வீட் போட்டு தரமான பதிலடியை சேவாக் கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்