அவசரப்பட்ட இங்கிலாந்து வீராங்கனை.. ஆட்டத்தை முடிச்ச இந்தியா.. சேவாக் போட்ட பங்கமான மீம்.. குசும்புக்காரருய்யா இவரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்றிருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பகிர்ந்த மீம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரன் அவுட்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வென்று கோப்பையை வசப்படுத்திய இந்திய அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 169 ரன்களை எடுத்து. இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா 50 ரன்களையும், தீப்தி ஷர்மா 68 ரன்களையும் எடுத்தனர்.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இறுதியாக 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போது இந்திய அணியின் தீப்தி ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சார்லட் டீன்-ஐ ரன் அவுட் செய்தார். இதன்மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
44 வது ஓவரை வீசிய தீப்தி சர்மா, பந்து வீசுவதற்குள் சார்லட் கிரீஸை விட்டு வெளியே சென்றதை பார்த்ததும், பந்தால் ஸ்டம்புகளை சிதறடித்தார். முன்னர் இதனை மன்கட் என அழைத்துவந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதையும் ரன் அவுட் வகையில் சேர்த்தது. அந்தவகையில் இந்த அவுட் சர்ச்சையை கிளப்பியது. மேட்ச் முடிந்ததும் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், விதிகளில் இல்லாத எதையும் செய்யவில்லை என தீப்தி சர்மாவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மீம்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய பதிவில் சேவாக்,"பல இங்கிலாந்து வீரர்கள் இப்படி அவுட் ஆவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. #Runout" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மீம் ஒன்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த மீமில் விளையாட்டை கண்டுபிடித்தவர்களே அதன் விதிமுறைகளை மறந்துவிட்டார்கள் என இங்கிலாந்து கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பக்கத்தில், விதிமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Funny to see so many English guys being poor losers. #Runout . pic.twitter.com/OJOibK6iBZ
— Virender Sehwag (@virendersehwag) September 24, 2022
மற்ற செய்திகள்