Karnan usa

தோனிய கன்னாபின்னானு 'அவரு' திட்டுறத நானே என் கண்ணால பார்த்துருக்கேன்...! 'அப்புறம் தோனிகிட்ட நானே போய் பேசினேன், அப்போ அவரு...' - சீக்ரெட்-ஐ உடைத்த சேவாக்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் உலகின் தல என செல்லமாக அழைக்கபடும் சி.எஸ்.கே தோனி திட்டுவாங்கிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

தோனிய கன்னாபின்னானு 'அவரு' திட்டுறத நானே என் கண்ணால பார்த்துருக்கேன்...! 'அப்புறம் தோனிகிட்ட நானே போய் பேசினேன், அப்போ அவரு...' - சீக்ரெட்-ஐ உடைத்த சேவாக்...!

ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர், உலக கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற சென்னையின் தல தோனி தற்போது ஐபில் தொடர்களில் மட்டும் சென்னை அணிக்கு விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் கிரெடிர் கார்டு விளம்பரத்தில் இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் அவர் ஆத்திரத்துடன் 'இந்திராநகர் ரெளடிடா...' என சொல்லும் வீடியோ தற்போது ட்விட்டர் மற்றும் முகநூலில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், இந்த கோபம் மாதிரியே ராகுல் டிராவிட் ஒருமுறை மகேந்திர சிங் தோனி மீது கோபப்பட்டு பார்த்திருப்பதாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் சேவாக் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, 'டிராவிட்டின் இந்த வீடியோவை பார்த்து தான் உங்களுக்கு அவர் கோவப்படுவாரா என நினைக்கிறீர்கள். ஆனால் நான் பல வருடங்கள் முன்பே டிராவிட் கோபப்பட்டு நான் பார்த்திருக்கிறேன்.

அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் எம்எஸ் தோனி அணியில் புதிய வீரர், நாங்கள் அப்போது பாகிஸ்தான் சென்றோம். அங்கு நடந்த ஒரு போட்டியில் தோனி ஒரு ஷாட் ஆடி, பாயிண்ட் திசையில் கேட்ச் ஆனார்.

Virender Sehwag says Rahul Dravid once angry with Dhoni

தோனி மீது டிராவிட் கடுமையான கோபம் கொண்டார். 'இப்படித்தான் விளையாடுவாயா, நீ ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும்' என கோபப்பட்டார். முழுவதும் அவர் ஆங்கிலத்தில் திட்டியதால் எனக்குப் பாதி புரியவில்லை.

Virender Sehwag says Rahul Dravid once angry with Dhoni

அதே போட்டியின் போது தோனி பேட் செய்ய வந்தபோது நிறைய ஷாட்களை விளையாடவில்லை. தோனியிடம் சென்று ஏன் இப்படி நல்ல ஷாட்களை ஆடவில்லை எனக் கேட்டேன். அதற்கு தோனி, 'மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க முடியாது. நான் ஆட்டத்தை மெதுவாக முடித்துவிட்டு செல்கிறேன்' என தோனி கூறியதாக நடந்த சம்பவத்தை ஆஷிஷ் நெஹ்ராவிடம் சேவாக் கூறி முடித்தார்.

மற்ற செய்திகள்