'நான் straight drive கத்துக்கிட்டது 'இப்படி' தான்'!.. அதிரடி பேட்ஸ்மேனாக மாறியது எப்படி?.. பின்னணியை உடைத்த சேவாக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கின் மிகப்பிரபலமான straight drive ஷாட்டை, அவர் எவ்வாறு கற்றுக் கொண்டார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 போட்டிகள் அதிகரித்ததன் காரணமாக தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் அதிரடிக்கு மாறியிருக்கின்றன. ஆனால் 90-ஸ் கிட்ஸ்களிடையே அதிரடி மன்னனாக வலம் வந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் விரேந்தர் சேவாக் தான்.
இவரின் அதிரடி காரணமாக டெஸ்ட் போட்டிகளே, ஒரு நாள் போட்டிகள் அளவுக்கு விறுவிறுப்பாக சென்றன. சேவாக் ஆடுகிறார் என்றால் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதற்கே டிவி முன்பு ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
1999ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளிலும் 2001ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமான விரேந்தர் சேவாக் 2013ம் ஆண்டு வரை சுமார் 14 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், Circuru என்ற செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய சேவாக், "1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து தான் கிரிக்கெட்டின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து தான் பேக் ஃபுட் (back foot) பஞ்ச் மற்றும் ஸ்டெரைட் டிரைவ் (straight drive) போன்ற ஷாட்களை ஆட கற்றுக்கொண்டேன்" என மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மேலும், நவீன கால தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசிய சேவாக், "இது போன்ற தொழில்நுட்பம் என் காலத்தில் இருந்திருந்தால் இன்னும் குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆட வந்திருப்பேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று இணையத்தில் கிரிக்கெட் தொடர்பான பல வீடியோக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் இக்கால தலைமுறை வீரர்கள் கிரிக்கெட் மற்றும் நுட்பங்கள் குறித்து விரைவாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. இதெல்லாம் என் காலத்தில் இருந்திருந்தால் நானும் விரைவாகவே நுட்பங்களை கற்றுக்கொண்டு விளையாட வந்திருப்பேன்.
நான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப நாட்களின் என்னுடைய கால் நகர்வுகள் அவ்வளவு சரியானதாக இல்லை என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் யாரும் அதற்கான ஆலோசனைகளை தரவில்லை. பின்னர் மன்சூர் அலி கான் பட்டோடி, சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் தான் எனக்கு கால் நகர்வுக்கான ஆலோசனை தந்து உதவினர் என்று உணர்வுப் பூர்வமாக பேசியுள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை சதங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதமும் (triple century) எடுத்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக விளங்கும் சேவாக் 1991ம் ஆண்டு தன்னுடைய 21வது வயதில் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் இந்திய அணிக்காக முதல் முச்சதத்தை சேவாக் அடித்ததன் காரணமாக அவர் 'சுல்தான் ஆஃப் முல்தான்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்