"இந்த தடவ அது நடக்கலாம்.." தோனி கேப்டன் ஆனதும்.. சிஎஸ்கே பற்றி பேசிய சேவாக்.. "நாங்களும் அதுக்கு தான்'ங்க 'Waiting'..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக கைப்பற்றி அசத்தி இருந்தது.

"இந்த தடவ அது நடக்கலாம்.." தோனி கேப்டன் ஆனதும்.. சிஎஸ்கே பற்றி பேசிய சேவாக்.. "நாங்களும் அதுக்கு தான்'ங்க 'Waiting'..

தொடர்ந்து, நடப்பு சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிக் கொள்ள, சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவரது தலைமையில் 8 போட்டிகள் ஆடி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

முன்னேறுமா சிஎஸ்கே?

மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நெருக்கடியான சூழல் சிஎஸ்கேவுக்கு உருவானது. இதனால், இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு அவர்கள் முன்னேறுவார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

அப்படி ஒரு சமயத்தில், திடீரென ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ள, மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி. அவரது தலைமையில், நிச்சயம் சிஎஸ்கே அணி தொடர் வெற்றிகளைக் குவித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வந்தனர்.

மீண்டும் கேப்டன் ஆன தோனி

தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக, தோனி தலைமையில் களமிறங்கி இருந்த சிஎஸ்கே, அந்த போட்டியில் வெற்றியும் பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக, இன்று தற்போது (04.05.2022) ஆடி வருகிறது சிஎஸ்கே.

virender sehwag feels csk can qualify playoffs

இந்நிலையில், சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது பற்றி, இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "2005 ஆம் ஆண்டில் இருந்து நான் தோனியுடன் இருந்திருக்கிறேன். அவரது தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த தடவையும் நடக்கும்..

நாங்கள் நிறைய ஐசிசி நாக் அவுட்களை வென்றிருக்கிறோம். வேறு நிறைய தொடர்களையும் வென்றுள்ளோம். இந்திய அணி முன்பு இழந்து வந்த போட்டிகள் எல்லாம், தோனி தலைமையில் வெற்றியாக மாறி இருந்தது. எனவே, அவற்றை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, இந்த முறை அனைத்து போட்டிகளையும் வென்று, சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது இந்த முறை நடக்கலாம் என நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

virender sehwag feels csk can qualify playoffs

தற்போது நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே, பீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

MSDHONI, CSK, SEHWAG, IPL 2022, PLAYOFFS, தோனி, சேவாக்

மற்ற செய்திகள்