‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரேனா வைரசுக்கு எதிரான மருத்துவப் பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக குப்பை சேகரிப்பவர் கைதட்டிய வீடியோவை பகிர்ந்த சேவாக்குக்கு பாராட்டும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.

‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸால் 400-க்கும் மேல் பாதிக்கப்பட்டும் 8 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது 5 மணியளவில் கொரோனா தடுப்பு மருத்துவப் பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக கைதட்டி கௌரவமளிக்கப்பட்டது.

பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினர், தங்களை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் கைத்தட்டும் வீடியோவை பகிர்ந்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் குப்பை சேகரிப்பவர் கைத்தட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுக்குத் தான் தற்போது பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நீங்கள் ஒரு வீடியோவை பதிவு செய்யும் முன் அவரின் மனிதநேயத்தை பாராட்டுவதற்கு முன் அவருக்கு சரியான உதவியை செய்யலாம் என்று பதிவிட்டுள்ளனர்.

VIRENDHARSHEWAG, TWITTER, CORONAVIRUS