‘இந்த அதிரடி ஆட்டத்துக்கு காரணம் அவர்தான்’.. அப்படியென்ன ‘அட்வைஸ்’ கொடுத்தார் விராட்..? இஷான் கிஷன் சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறிய அறிவுரை குறித்து மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.

‘இந்த அதிரடி ஆட்டத்துக்கு காரணம் அவர்தான்’.. அப்படியென்ன ‘அட்வைஸ்’ கொடுத்தார் விராட்..? இஷான் கிஷன் சொன்ன சீக்ரெட்..!

அபுதாபி மைதானத்தில் நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் (Ishan Kishan) 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 82 ரன்களும் எடுத்தனர்.

Virat told me I am selected as an opener in T20 WC squad: Ishan Kishan

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Virat told me I am selected as an opener in T20 WC squad: Ishan Kishan

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய இஷான் கிஷன், ‘டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இப்படியொரு இன்னிங்ஸில் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பாசிட்டீவாக இருந்தோம். அதனால் நாங்கள் 250-260 ரன்கள் அடிப்போம் என எதிர்பார்த்தேன். நல்ல ஃபார்மில் உள்ளபோது, மனநிலையும் சரியாக இருக்க வேண்டும்’ எனக் கூறினார்.

Virat told me I am selected as an opener in T20 WC squad: Ishan Kishan

தொடர்ந்து பேசிய அவர், ‘விராட் கோலி (Virat Kohli) மற்றும் பும்ரா கொடுத்த ஆலோசனை எனக்கு பெரிதாக உதவியது. அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும், க்ருணால் பாண்டாவும் பக்கபலமாக இருந்தனர். இதுதான் கற்றுக்கொள்ளும் தருணம், இங்கு நடக்கும் தவறுகளை உலகக்கோப்பை தொடரில் நடக்காமல் பார்த்துக்கொள்ள அனைவரும் அறுவுறுத்தினர். உலகக்கோப்பை தொடரின் என்னை தொடக்க வீரராக களமிறக்க முடிவெடுத்திருப்பாதாக விராட் கோலி கூறினார். அதனால் அதற்கு தயாராக இருக்குமாறு எனக்கு அவர் அறிவுரை வழங்கினார்’ என இஷான் கிஷன் கூறினார்.

Virat told me I am selected as an opener in T20 WC squad: Ishan Kishan

முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் இஷான் கிஷன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அடுத்த சில போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டக்அவுட்டில் சோகமாக அமர்ந்திருந்த இஷான் கிஷனை, விராட் கோலி அழைத்து அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்