VIDEO: ‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது’!.. ‘புஷ்பாவாக மாறிய வார்னர்’.. பங்கமாய் கலாய்த்து ‘கமெண்ட்’ செய்த கோலி.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவுக்கு விராட் கோலி கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ம் தேதி ஹப்பா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 152 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் பாடல் ஒன்றுக்கு தனது முகத்தை மாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ‘நீங்க நல்லா தானே இருக்கீங்க மேட்?’ என கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த டேவிட் வார்னர், ‘விளையாடும்போது சின்ன காயம் ஏற்பட்டது. அது தலையில் ஏற்பட்டதா என நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக தெரியும். அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் நல்லா இருக்கேன்’ என ஸ்மைலி எமோஜியை பதிவிட்டு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் டேவிட் வார்னர் 94 ரன்கள் எடுத்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், இரண்டாவது இன்னிங்சில் டேவிட் வார்னர் பேட்டிங் செய்யவில்லை, அதேபோல் பில்டிங் செய்யவும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்