VIDEO: ‘என்னா அடி’!.. ‘101 மீட்டர் சிக்ஸர்’.. மிரண்டு பார்த்த கோலி..! அப்டி யார் அடிச்சா தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் தடைப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாசிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியை பொறுத்தவரை கே.எல்.ராகுல் 45 ரன்களும், ஷிகர் தவான் 32 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும், கேப்டன் விராட் கோலி 30 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் ஹசரங்கா வீசிய ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் விளாசினார். அது 101 மீட்டர் தூரம் சென்று ஸ்டேடியத்தில் பட்டு திரும்பியது. இதனை மறுமுனையில் நின்றுகொண்டிருந்த கேப்டன் கோலி வியந்து பார்த்தார்.
Lovely Reactions after that Monstrous 101 m Six from Shreyas Iyer 😂😂😂😍😍😍❤❤❤ pic.twitter.com/o4c1pumvB9
— Genuine Cricket Fan (@Vijay__Kohli_18) January 7, 2020