போன் தொலைத்த வேதனையில் ட்வீட் போட்ட கோலி?.. பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் 'பரபரப்பு' கமெண்ட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர், 09.02.2023 அன்று ஆரம்பமாகிறது.

போன் தொலைத்த வேதனையில் ட்வீட் போட்ட கோலி?.. பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் 'பரபரப்பு' கமெண்ட்!!

                                                                                                  Images are subject to © copyright to their respective owners

இரு அணிகளும் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து மோதி இருந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இதனால் இந்த முறை  இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்முரமாக தயாராகி உள்ளது.

அதே போல இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால், இந்த தொடரை வெல்லவோ அல்லது தொடரை சமன் செய்யவோ வேண்டும். இப்படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே ஒரு காரணம் இருப்பதால், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிச்சயம் விறுவிறுப்பை எகிற வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரிலும் மோதுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவும் அதற்கு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ போட்டுள்ள கமெண்ட்டும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Virat Kohli tweet about his phone food delivery company responds

Images are subject to © copyright to their respective owners

விராட் கோலி பகிர்ந்துள்ள ட்வீட்டில், "உங்களின் புதிய மொபைலை Unbox செய்யாமல் தொலைப்பது போல ஒரு சோகம் எதுவுமே இல்ல ☹️. யாராவது பார்த்தீர்களா?" என குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த ட்வீட் அதிகம் வைரலாகிய சூழலில், பலரும் தங்கள் தொலைத்த போன் கதைகளை கமெண்ட்டில் குறிப்பிட்டு வந்தனர்.

வேறு ஏதேனும் காரணத்திற்காக கூட அவர் அப்படி பகிர்ந்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இதனிடையே, கோலி ட்வீட்டில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ கமெண்ட் ஒன்றை போட்டுள்ளது.

Virat Kohli tweet about his phone food delivery company responds

Image Credit : Virat Kohli Twitter

அனுஷ்கா போனில் இருந்து ஒரு ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து பாருங்கள் என குறிப்பிட்டு அதன் மூலம் சோகம் மறக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Virat Kohli tweet about his phone food delivery company responds

Image Credit : Virat Kohli Twitter

கோலி போன் தொலைத்ததாக குறிப்பிட்ட கமெண்ட்டில் சோமாட்டோ செய்துள்ள கமெண்ட் மீண்டும் இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

VIRAT KOHLI, ZOMATO, TWEET

மற்ற செய்திகள்