"அவரு எங்க 'டீம்'க்கு கெடச்ச பெஸ்ட் 'பிளேயர்' ... நீங்க நெனச்சது ஒன்னும் நடக்கப் போறதில்ல..." சக வீரருக்காக 'குரல்' கொடுத்த இந்திய 'கேப்டன்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 227 ரன்களில் அபார வெற்றி பெற்றிருந்தது.
சுமார் 22 வருடங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இனியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்த போட்டியில், குல்தீப் யாதவை அணியில் இடம்பெறச் செய்யாமல், 15 பேர் அணியில் இல்லாத நதீமை அணியில் இணைத்தது, ரஹானே இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆடி அவுட்டானது என பல விஷயங்களை ரசிகர்கள் சுட்டிக் காட்டி, இந்திய அணியின் தோல்விக்கான காரணமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, 'முதல் இன்னிங்ஸில், எங்களது பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு அதிக அழுத்தத்தை கொடுக்காமல் விட்டு விட்டோம். அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக பந்து வீசினர். நதீம் மற்றும் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசத் தவறி விட்டனர். அப்படி சிறப்பாக வீசியிருந்தால் அதிக அழுத்தத்தை இங்கிலாந்து அணிக்கு ஏற்படுத்தியிருக்கலாம். அதே போல, பேட்டிங்கிலும் நாங்கள் கூடுதலாக ரன்கள் எடுக்கத் தவறி விட்டோம்.
இந்த டெஸ்ட் போட்டியில் ரஹானே சிறப்பாக ஆடாததை பலரும் குறை கூறி வருகின்றனர். இந்திய அணியில், புஜாரா எப்படியோ அதே போல தான் ரஹானேவும். அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகவும் முக்கியமான டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் தொடர்ந்து ஆடத் தான் போகிறார். அவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் இந்த விஷயத்தில் என்னத் தான் நீங்கள் தோண்ட நினைத்தாலும், இதற்குள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை' என துணை கேப்டன் ரஹானே சிறப்பாக ஆடாத போதும், அவரை விட்டுக் கொடுக்காமல் விராட் கோலி ஆதரவாக பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்