'மிகுந்த கனத்த மனதுடன் இந்த முடிவை எடுக்கிறேன்'... 'நீண்ட கடிதத்தை வெளியிட்ட விராட் கோலி'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருவது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

'மிகுந்த கனத்த மனதுடன் இந்த முடிவை எடுக்கிறேன்'... 'நீண்ட கடிதத்தை வெளியிட்ட விராட் கோலி'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம், சமீப காலமாகச் சிறப்பாக இல்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோலி எந்த சதத்தையும் அடிக்கவில்லை. இதுவும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Virat Kohli steps down as India's T20 captain

இந்நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படும் கோலிக்கு கேப்டன் பதவியில் இருக்கும் அழுத்தம் தான் காரணம் என கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அதிரடியாக அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் கோலி நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ''அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கோலி, வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடக்கவிருக்கும் 20 ஓவர் போட்டிகளுக்குப் பின்னர், தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கோலி'' அறிவித்துள்ளார்.

கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை வகித்து அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார்.  45 டி20 போட்டிகளுக்குத் தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 14 தோல்விகளையும் கண்டுள்ளார். 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Virat Kohli steps down as India's T20 captain

கடந்த சில வாரங்களாக ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலி கேப்டனாகத் தொடர்வார் என்று பல தகவல்கள் வலம் வந்த நிலையில், தற்போது கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்