'இந்த தோல்வினால 'உலகமே முடிஞ்சிருச்சுனு' அர்த்தம் இல்ல!'... 'உச்சகட்ட ஆதங்கத்தில்'... கொட்டித் தீர்த்த 'கோலி!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பேட்டிங்கில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து தெரிவித்துள்ள கோலி, இந்த போட்டியில் டாஸ் ஜெயிப்பது என்பது முக்கியமான விஷயம். டாஸில் தோற்றிருக்க கூடாது. அதே சமயம், நியூசிலாந்து அணிக்கு சவால் விடும் வகையில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. பந்து வீச்சாளர்கள் இன்னும் நேர்த்தியாக செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பேட்டிங்கில் தான் மொத்தமாக பின்னடைவு ஏற்பட்டது. மேலும், ஒரு டெஸ்ட் தோல்வியை மட்டும் வைத்து கொண்டு எங்களை மோசமான அணி என்று கூறிவிட இயலாது. இந்த தோல்வியால் உலகமே முடிந்து விட்டது போன்று நினைக்கவில்லை. பேட்டிங்கில் வெளுத்து கட்டினால் மட்டுமே பந்து வீச்சாளர்களால் எதிரணிக்கு சவால் விடுக்க முடியும். ஆனால், இந்த போட்டியில் அது நடக்கவில்லை.
என்ன தான் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், வெளிநாடுகளில் எங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதை ஏற்று கொள்கிறோம் என கோலி கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. எதுவாயினும் அதிலிருந்து நாம் கற்பது விளையாடும் விதத்தை மட்டுமே. அந்த வகையில் நாங்கள் விளையாடும் விதங்களை கற்று கொண்டதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
தனது பேட்டிங் திறன் பற்றி குறிப்பிட்ட கோலி, நன்றாக இருக்கிறேன். நன்றாக பேட்டிங் செய்கிறேன், சில நேரங்களில் எடுக்கும் ரன்கள் பேட்டிங் திறனை பிரதிபலிக்காது என்று நினைப்பதாகத் தெரிவித்தார்.