திடீர்ன்னு கோபத்தில் முறைத்து பார்த்த கோலி.. "அந்த ஆவேச லுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

திடீர்ன்னு கோபத்தில் முறைத்து பார்த்த கோலி.. "அந்த ஆவேச லுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?"

                                                                Images are subject to © copyright to their respective owners

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 480 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தார்.

விராட் கோலியின் டெஸ்ட் சதம்...

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடி இருந்த இந்திய அணி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. நான்காம் நாள் முடிவடையும் சூழலில் இருந்த போது ஆல் அவுட்டாகி இருந்த இந்திய அணி, 571 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சுமார் 1205 நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 186 ரன்களில் அவுட்டானார் கோலி. மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்திருந்தார்.

Virat Kohli stare at ks bharat after refusing single

Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருப்பதால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கடுப்பான கோலி

முன்னதாக, இந்திய அணியில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்யவில்லை என்பதால் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு விக்கெட் கீப்பர் KS பரத் ஆட வந்தார். விராட் கோலி மற்றும் பரத் ஆகியோர் சிறப்பாக ஆடி 84 பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதற்கிடையே, கோலி மற்றும் பரத் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 109 ஆவது ஓவரில் பந்தை எதிர்கொண்ட கோலி, அதனை அடித்து விட்டு ரன் ஓட நினைத்தார். ஆனால், மறுபக்கம் இருந்த பரத் ரன் ஓட மறுத்ததுடன் கிரீஸிற்கு அருகே நின்று விட்டார். ஆனால் பாதிக்கு மேல் கிரீஸை விட்டு வெளியே வந்த கோலி, பரத் ரன் ஓட வராததால் மீண்டும் வேகமாக ஓடி கிரீஸுக்குள் செல்லவும் செய்திருந்தார்.

Virat Kohli stare at ks bharat after refusing single

Images are subject to © copyright to their respective owners

தனது விக்கெட்டை காத்துக் கொண்ட பின் கடுப்பான கோலி, பரத்தை திரும்பி பார்த்து அவரை முறைத்ததுடன் கோபத்தில் ஏதோ வார்த்தையையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை விராட் கோலி அந்த சமயத்தில் ரன் அவுட் ஏதாவது ஆகியிருந்தால் இந்திய அணி சிறந்த ரன்களை எட்டாமல் போனது மட்டுமில்லாமல், விராட் கோலி தனது டெஸ்டில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்த சதத்தை அடிக்கக் கூட தவறி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

VIRATKOHLI, KS BHARAT, IND VS AUS

மற்ற செய்திகள்