"T20 போட்டிகளில் இனிமே விராட் கோலி விளையாடாம இருக்கணும்".. ஷோயப் அக்தரின் அட்வைஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

"T20 போட்டிகளில் இனிமே விராட் கோலி விளையாடாம இருக்கணும்".. ஷோயப் அக்தரின் அட்வைஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அப்பாவின் சடலத்திற்கு முன் திருமணம் செய்துகொண்ட மகன்.. கடைசி ஆசையை நிறைவேற்ற திரண்டு வந்த ஊர் மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் விராட் கோலி. சமீப ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் துவங்கி வரிசையாக உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிகளில் அதிரடி காட்டினார் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியிலும் விராட் கோலி மிகவும் குறைவான ரன்களையே எடுத்திருந்தார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துவந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார் கோலி.

Images are subject to © copyright to their respective owners.

அதுவும் 186 ரன்கள் குவித்து தான் ஒரு கிங் கோலி என்பதை மீண்டும் அந்த உலகிற்கு நிரூபித்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் விராட் கோலி குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார்.

பீஸ்ட்

அப்போது விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய அவர்,"விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது, இறுதியாக, அவர் இப்போது மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். இப்போது அவர் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார். 

Images are subject to © copyright to their respective owners. 

அவர் 110 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்போது அவருக்கு கேப்டன் பதவி இல்லை, ஆகவே பீஸ்ட் போல் ரன்களை குவிப்பார்" என்றார்.

டெஸ்ட் போட்டிகள்

மேலும், கோலி டி20 போட்டிகளில் விளையாட கூடாது என பேசிய அக்தர்,"ஒரு கிரிக்கெட் வீரராக, என்னைக் கேட்டால், அவர் டி20 போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் உற்சாகமாக இருக்க விரும்புபவர். மாறாக டி20 போட்டிகள் அவரது ஆற்றலை வீணடிக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

அவருக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது. நல்ல ஃபிட்டாகவும் இருக்கிறார். இன்னும் 6 - 8 வருடங்கள் அவரால் விளையாட முடியும். அதில் 30 - 50 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினால் சுலபமாக அவரால் இன்னும் 25 சதங்களை எடுக்க முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | தமிழ்-ல பட்டய கிளப்பும் ரஹானே.. ஹர்பஜனை மிஞ்சிடுவாரு போலயே.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, VIRAT KOHLI, T20, PAKISTAN EX PACER AKTAR

மற்ற செய்திகள்