‘14 வருசத்துல இதுதான் முதல்முறை’!.. WTC final-ல் ‘அவர்’ இல்லாமல் விளையாடப் போகும் கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி நடத்தும் சர்வதேச டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியை முதல்முறையாக தோனி இல்லாமல் விராட் கோலி சந்திக்க உள்ளார்.

‘14 வருசத்துல இதுதான் முதல்முறை’!.. WTC final-ல் ‘அவர்’ இல்லாமல் விளையாடப் போகும் கேப்டன் கோலி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2004-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சில போட்டிகள் சொதப்பிய தோனி, அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி காட்ட ஆரம்பித்து கவனம் பெற்றார். இதனால் 2007-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.

Virat Kohli set to feature in his first ICC final without MS Dhoni

இதனை அடுத்து அதே ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி கோப்பையை வென்று கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் அனைத்து வகையான தொடருக்கும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனியின் தலைமையிலான இந்திய அணி பல கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது.

Virat Kohli set to feature in his first ICC final without MS Dhoni

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதனை அடுத்து 2013-ம் ஆண்டு மினி உலகக்கோப்பை என கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்தியா கைப்பற்றியது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து வகையான கிரிக்கெட் தொடரிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

Virat Kohli set to feature in his first ICC final without MS Dhoni

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இப்போட்டி இன்று (18.06.2021) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக, தோனி இல்லாமல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களம் காணவுள்ளது.

மற்ற செய்திகள்