'மேட்ச்க்கு முன்னாடி ஏ.பி.டிவில்லியர்ஸ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார்...' 'அத தான் மேட்ச்ல follow பண்ணினேன்...' - மனம் திறந்த கோலி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆன விராட் கோலி சமீப காலங்களாக அவர் சரியாக விளையாடாத காரணத்தால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தனர்.

'மேட்ச்க்கு முன்னாடி ஏ.பி.டிவில்லியர்ஸ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார்...' 'அத தான் மேட்ச்ல follow பண்ணினேன்...' - மனம் திறந்த கோலி...!

இந்நிலையில் நேற்றைய (14-03-2021) ஆட்டத்தில் 49 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்மீண்டும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறினார்.

                             Virat Kohli says I did exactly what AB de Villiers said

இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி பேசினார். அப்போது, 'நான் என்னுடைய ஆட்டத்தில் கிரிக்கெட்டின் அடிப்படைகளுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தினேன். வெளியே பல மாறுதல்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆட்டத்தில் பங்களிப்பு செய்வதில் நான் எப்போதும் பெருமை படுவதுண்டு.

               Virat Kohli says I did exactly what AB de Villiers said

ஆகையால், 73 ரன்கள எடுத்ததை விட, இது எனக்கு மன நிறைவாக இருந்தது. பந்தின் மேல் கண்ணை வைத்து கவனம் செலுத்தினேன். அணி நிர்வாகமும் என்னிடம் என் பேட்டிங் குறித்து நிறைய பேசினார்கள், விவாதமும் நடந்தது.

                        Virat Kohli says I did exactly what AB de Villiers said

என் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் என்னுடன் நிறைய பேசி எனக்கு நம்பிக்கையூட்டினார். அதுவும் மன நிறைவாக இருந்தது. குறிப்பாக இந்த ஆட்டத்துக்கு முன்பு ஏ.பி.டிவில்லியர்ஸிடம் சிறப்பு உரையாடல் மேற்கொண்டேன். பேட்டிங் பற்றி ஆலோசனைகளைப் பெற்றேன்.

அவர் என்னிடம் ‘பந்தை நன்றாக உற்று கவனி’ என்று கூறினார். அதைத்தான் நான் செய்தேன்.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து தாங்கள் உலகின் நம்பர் 1 என்று நிரூபிக்கும் வகையில் மிக சிறப்பாக விளையாடினர். ஆகவே இந்தப் போட்டியில் தொழில்நேர்த்தியுடன் விளையாடி வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் இந்திய அணி செய்தது. இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

                        Virat Kohli says I did exactly what AB de Villiers said

நேற்று (14-03-2021) 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த கோலி அரைசதத்தை சிக்சர் மூலமாகவும் வெற்றிக்கான ஷாட்டை சிக்சர் மூலமாகவும் அடித்து ரசிகர்களை குதுகலப்படுதினார்.

மற்ற செய்திகள்