10 வகுப்பு மார்க் ஷீட்டை பகிர்ந்த கிங் கோலி.. அந்த கேப்ஷன் தான் செம்ம.. வைரலாகும் போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் விராட் கோலி தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்திருக்கிறார்.

10 வகுப்பு மார்க் ஷீட்டை பகிர்ந்த கிங் கோலி.. அந்த கேப்ஷன் தான் செம்ம.. வைரலாகும் போஸ்ட்..!

                  Images are subject to © copyright to their respective owners.

விராட் கோலி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் விராட் கோலி. பல இக்கட்டான சேஸிங்கிலும் கில்லியாக விளையாடி வெற்றியை எதிரணியினரிடத்தில் இருந்து பெற்றுக்கொடுப்பதில் மாபெரும் ஜீனியஸ். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி பல வருடம் நீடித்து வந்தார். கடந்த ஆண்டு தனது கேப்டன்சி பதவியை துறந்தார் கோலி. இருப்பினும் தொடர்ந்து தான் பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்திருந்தார்.

Virat Kohli reveals his class 10th marks in koo

Images are subject to © copyright to their respective owners.

சமீப ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் துவங்கி வரிசையாக உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிகளில் அதிரடி காட்டினார் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியிலும் விராட் கோலி மிகவும் குறைவான ரன்களையே எடுத்திருந்தார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துவந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார் கோலி.

மார்க் ஷீட்

இந்த நிலையில் விராட் கோலி தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை பகிர்ந்திருக்கிறார். விராட் கோலி 2004 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார். விராட் கோலி ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் வாங்கி ஏ1 கிரேடு பெற்றுள்ளார். அதேபோன்று மொழிப் பாடமான ஹிந்தியில் விராட் கோலி 75 மதிப்பெண்கள் பெற்று பி1 கிரேட் பெற்றுள்ளார். மிகவும் கடினமான கணித பாடத்தில் விராட் கோலி 51 மதிப்பெண்கள் பெற்று சி2 கிரேட் பெற்றுள்ளார்.

Virat Kohli reveals his class 10th marks in koo

Images are subject to © copyright to their respective owners.

இதேபோன்று அறிவியல் தொழில்நுட்ப பாடத்தில் விராட் கோலி தேர்வில் 32 மதிப்பெண்களும் செய்முறை தேர்வில் 23 என மொத்தம் 55 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சோசியல் சயின்ஸ் பாடத்தில் விராட் கோலி 81 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

VIRAT KOHLI, RCB

மற்ற செய்திகள்