" பரபரப்பான மேட்ச்-ல தோனியோட நிற்கும் போது..".. விராட் கோலி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தல தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

" பரபரப்பான மேட்ச்-ல தோனியோட நிற்கும் போது..".. விராட் கோலி உருக்கம்..!

இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ஒரு சரிவு இருக்கத்தான் செய்தது. 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு பிறகு பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினார் கோலி. அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது செய்தியாளர்களை சந்தித்திருந்த விராட் கோலி,"நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, ஒருவரிடமிருந்து ஒரு செய்தி மட்டுமே வந்தது. கடந்த காலத்தில் அவருடன் விளையாடியிருக்கிறேன். அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை" என வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்பாடு செய்திருந்த பாட்காஸ்டில் பேசியிருக்கும் விராட் கோலி,"எனக்கும் தோனிக்கும் இடையே தர்மசங்கடமான சூழ்நிலை ஒருமுறை கூட ஏற்பட்டது கிடையாது. அந்த அளவுக்கு எங்களிடத்தில் புரிதல் இருந்தது. என்னை அவர் பாதுகாத்து வழிநடத்தினார். சிறிதுசிறிதாக என்னை செதுக்கினார். அவருக்கு எப்போதும் நான் துணை கேப்டனாக இருந்திருக்கிறேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எப்போதும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். எப்போதும் அவருக்கு வலது கையாக இருந்தேன். மேலும் நான் அணிக்காக நிறைய மேட்ச் வின்னிங் நாக்ஸை விளையாடியதால் எனக்கு நம்பிக்கையும் கிடைத்தது." என்றார்.

Virat kohli Reveals bond between him and legend MS Dhoni

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசிய அவர்,"மேட்ச் பரபரப்பான சூழ்நிலையை அடையும்போது என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பேன். அதனை அவரிடமும் தெரிவிப்பேன். வெறும் பீல்டிங் செய்யும் வீரராக இருக்க விரும்பியதில்லை. ஆகவே, என்னை அவர் புரிந்துகொண்டார். அதன்பின்னர் அவருடனான நெருக்கம் அதிகரித்தது. அவருடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது வரம் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும், தான் போன் செய்யும்போது அவர் எடுப்பதில்லை என பேசிய கோலி,"சாதாரண நாட்களில் அவருக்கு போன் செய்தால் 99 சதவீதம் எடுக்க மாட்டார். ஏனெனில் அவர் போனையே பார்ப்பதில்லை. ஆனால், எனது மனைவி, குடும்பத்திற்கு பிறகு மனம் திறந்து பேசக்கூடிய ஒருவர் என்றால் சந்தேகமே இல்லாமல் அது தோனிதான். எனக்கு தற்போது நடப்பவை ஏற்கனவே அவருக்கு நடந்திருக்கிறது. ஆகவே எனக்கு அவர் அறிவுரை கூறுகிறார். பல விதங்களில் நான் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கு இந்த ஆலோசனைகளும் ஒரு காரணம்" என்றார்.

VIRAT KOHLI, MS DHONI, CRICKET

மற்ற செய்திகள்