இதுக்கு கோலி சம்மதிக்கவே இல்லையா..? புது சர்ச்சையை கிளப்பும் ‘கேப்டன்சி’ விவகாரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக சம்மதிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை எடுத்து வரும் டிசம்பர் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இதனுடைய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலக வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரிகள் நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு (டி20, ஒருநாள்) இரண்டு கேப்டன்கள் செயல்படுவதை பிசிசிஐ விரும்பவில்லை. அதனால் இதுபற்றி விராட் கோலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலிக்கு 48 மணிநேர கால அவகாசம் பிசிசிஐ கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் விராட் கோலி இது குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்த சூழலில் நேற்று திடீரென ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது. இது விராட் கோலியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்