Ind vs SL: 100 ஆவது டெஸ்டில் மைல்கல் சாதனையை தொட்ட கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேபட்னான விராட் கோலி இன்று தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
கோலியின் 100 ஆவது டெஸ்ட்:
இன்று இலங்கை அணிக்கு எதிராக இந்தியா மொஹாலியில் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். அதனால் இதை அவர் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இந்த போட்டியில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இலலாமல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அதற்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சகவீரர்களின் பாராட்டு மழை:
டெஸ்ட் அரங்கில் ஒரு வீரர் 100 போட்டிகள் விளையாடுவது சாதாரண காரியம் இல்லை. அதற்கு அசாத்தியமான உடல்தகுதியில் டெஸ்ட் போட்டியின் மீது தீராக்காதலும் வேண்டும். உலக கிரிகெட்டில் இதுவரை இந்த மைல்கல்லை எட்டியவர்கள் வெகுசிலரே. அந்த ஜாம்பவான்களின் வரிசையில் இப்போது கோலி இணைந்துள்ளதை அடுத்து அவருக்கு சக இந்திய வீரர்கள் வாழ்த்துகளைக் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோக்களை பிசிசிஐ தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
மொஹாலியில் இன்று:
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 80 ரன்கள் இருக்கும் போது மயங்க் அகர்வால் அவுட்டான போது கோலி தனது 100 ஆவது போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்புக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கோலி 45 ரன்களில் அவுட்டானார்.
டெஸ்ட் போட்டியில் 8000 ரன்கள்:
இந்த போட்டியில் அவர் 38 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இந்த மைல்கல்லை கட்டும் 6 ஆவது இந்திய பேட்ஸ்மேன் கோலி ஆவார். கோலிக்கு முன்னதாக இந்த மைல்கல்லை சச்சின், கவாஸ்கர், டிராவிட், லக்ஷ்மன், சேவாக் ஆகிய ஐந்து பேர் கடந்துள்ளனர். இவர்களோடு ஆறாவது இந்திய வீரராக கோலி இணைந்துள்ளார்.
சற்றுமுன் நிலவரம்:
இன்று காலைமுதல் பேட் செய்துவரும் இந்திய அணி தற்போது 4 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 58 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் சேர்த்தனர். தற்போது களத்தில் ரிஷப் பண்ட் 28 ரன்களோடும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களோடும் விளையாடி வருகின்றனர்.
Ind vs SL :10 ஆண்டுகளில் புஜாரா, ரஹானே இல்லாத முதல் டெஸ்ட்… அவர்களின் இடத்தில் யார்?
மற்ற செய்திகள்