‘கிங்’ கோலியா? இல்ல ஸ்மித்தா?.. யாருக்கு முதல் இடம்..? வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

‘கிங்’ கோலியா? இல்ல ஸ்மித்தா?.. யாருக்கு முதல் இடம்..? வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல்..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை கைப்பற்றினார்.

இதனை அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் மீண்டும் முதல் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்து நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடுத்து அசத்தினார். இதனால் ஸ்மித்திற்கும் (931), விராட் கோலிக்கும் (928) இடையே 3 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

இதனிடையே நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் 8 புள்ளிகளை இழந்து 923 புள்ளிகளை பெற்றார். இதனால் 928 புள்ளிகளுடன் மீண்டும் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். 3-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சனும் (877), 4-வது இடத்தில் இந்திய வீரர் புஜாராவும் (791) உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (764) 12 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

VIRATKOHLI, ICC, CRICKET, ICCTESTRANKINGS, STEVESMITH, DAVIDWARNER