இதுக்குதாங்க அவரை கொண்டாடுறாங்க.. புஜாரா சதம் அடிச்சப்போ கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா சதம் அடித்த நிலையில் அதனை கோலி கொண்டாடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | சிசிடிவி கேமராவில் டம்ளர்.. டாஸ்மாக் சுவத்துல ஓட்டையை போட்டு ஆட்டை.. யாருசாமி இவங்க.?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதனையடுத்து, வங்க தேசத்திற்கு சென்ற இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்க தேசம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், சாட்டோகிராம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் விளையாடினர். இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய பண்ட் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல, ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடி 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல அஷ்வின் இறுதியில் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேசம் 150 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆகவே, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடியது. அதில் துவக்க ஆட்டக்காரர் கில் சதமடித்து அசத்தினார். அதேபோல, துணை கேப்டன் புஜாரா அபாரமாக ஆடி சதம் விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 19 வது சதமாகும். 130 பந்துகளில் 102 ரன்களை அவர் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய அணி கேப்டன் ராகுல் அறிவித்தார்.
இந்நிலையில், புஜாராவின் சதத்தை கோலி கொண்டாடும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புஜாரா சதம் அடித்தவுடன் எதிர் புறம் நின்றிருந்த கோலி கைகளை உயர்த்தியபடி சந்தோஷமாக கூச்சலிடுகிறார். பின்னர், புஜாராவை கட்டியணைத்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ விராட் கோலி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
Virat Kohli the most selfless player ever pic.twitter.com/973w4KXT6S
— leishaa ✨ (@katyxkohli17) December 16, 2022
Also Read | ரொனால்டோவை விளையாட அனுமதிக்காத பயிற்சியாளர்.. அணி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..! FIFA2022
மற்ற செய்திகள்