Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

களத்துல தான் 2 பேரும் எதிரி.. ஆனா மத்தபடி.. ஃபெடரரின் கடைசி போட்டியில் கதறியழுத நடால்.. கோலியின் உணர்ச்சிகர போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஜர் ஃபெடரரின் கடைசி போட்டியில், ரஃபேல் நடால் கண்ணீர் சிந்திய நிகழ்வு ரசிகர்களை கலங்கடித்திருக்கிறது. இந்நிலையில், இருவரையும் பாராட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

களத்துல தான் 2 பேரும் எதிரி.. ஆனா மத்தபடி.. ஃபெடரரின் கடைசி போட்டியில் கதறியழுத நடால்.. கோலியின் உணர்ச்சிகர போஸ்ட்..!

ரோஜர் பெடரர்

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசில் என்ற பகுதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தவர் ரோஜர் ஃபெடரர். தந்தை ராபர்ட் ஃபெடரர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். தாய் லினெட் டு ராண்ட்  தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். சிறுவயது முதலே கால்பந்து, டென்னிஸ், பாட்மிண்டன், கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய ஃபெடரர் அதன்பிறகு டென்னிஸ் தான் தனது வாழ்க்கை என தேர்வு செய்து அதில் முழுநேரமாக ஈடுபட துவங்கினார்.

ஒருநாளைக்கு பல மணிநேரம் வரையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஃபெடரர் 1998-இல் ஒற்றயர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதே ஆண்டு ஆரஞ்சு பௌல் பட்டத்தையும் பெற்று ஐ.டி.எஃ-னால் அவ்வாண்டிற்கான உலகில் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரராக அங்கீகரிக்க பட்டார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் பெரும் தலைகளுக்கே சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் ஃபெடரர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஃபெடரர் அறிவித்தது, உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடைசி போட்டி

இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற தனது இறுதி போட்டியான லேவர் கோப்பை போட்டியில் பங்கேற்றார் ஃபெடரர். இதில் ஐரோப்பா அணிக்காக ஃபெடரர், நடால் ஆகியோர் களமிறங்கினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்  பெடரர் -  நடால் இணை தோல்வியை தழுவியது. இதனையடுத்து தனது இறுதிப்போட்டி குறித்து பேசிய ஃபெடரர் சக வீரர்கள் மற்றும் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்தார்.

 

அப்போது, ரஃபேல் நடால் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவந்தன. பொதுவாக, ஃபெடரர் - நடால் இடையிலான போட்டி என்றால் களத்தில் அனல் பறக்கும். இந்த போட்டியை காண ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் எழும். இவர்கள் இருவரும் டென்னிஸ் களத்தில் 40 முறை எதிராக மோதியுள்ளனர். அவற்றில் நடால் 24 முறையும், ஃபெடரர் 16 முறையும் வென்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக இவர்களுக்கு இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் 7ல் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் கடைசியாக ஃபெடரர் - நடால் மோதியிருந்தனர். அதில் ரோஜர் ஃபெடரர் 4 செட்களில் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பேஸ்புக் பக்கத்தில்,"போட்டியாளர்கள் இப்படி உணரலாம் என யார் நினைத்திருப்பார்கள். அதுதான் விளையாட்டின் அழகு. எனக்கு பிடித்த புகைப்படம் இது. உங்கள் தோழர்கள் உங்களுக்காக அழும்போது, ​​உங்கள் கடவுள் கொடுத்த திறமையை நீங்கள் ஏன் செய்ய முடிந்தது என்று உங்களுக்குத் தெரியும். இருவர்மீதும் மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கலங்கிய கண்ணுடன் நடால், ஃபெடரரின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

VIRATKOHLI, ROGER FEDERER, RAFAELNADAL

மற்ற செய்திகள்