'அந்த' ஒரு விஷயத்துல... 'ரஹானே'வை மலை போல நம்பியிருக்கும் 'கோலி'... கேப்டன் 'ஆசை'ய சிறப்பா நிறைவேத்திக் கொடுப்பாரா 'ரஹானே'??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

'அந்த' ஒரு விஷயத்துல... 'ரஹானே'வை மலை போல நம்பியிருக்கும் 'கோலி'... கேப்டன் 'ஆசை'ய சிறப்பா நிறைவேத்திக் கொடுப்பாரா 'ரஹானே'??

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்கவுள்ள நிலையில், அதன் பிறகு தன்னுடைய குழந்தை பிறக்கவுள்ளத்தை அடுத்து இந்தியா திரும்பவுள்ளார். இதன் காரணமாக, மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை துணை கேப்டன் ரஹானே வழிநடத்தவுள்ளார்.

கேப்டன் கோலி டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் போவது இந்திய அணியின் பேட்டிங்கில் மட்டும் பின்னடைவாக இல்லாமல், அணியை தலைமை தாங்குவதிலும் ஏதேனும் பின்னடைவு ஏற்படக்கூடுமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலம்மிக்க ஆஸ்திரேலிய அணியை ரஹானே தலைமையிலான இந்திய அணி சமாளிக்குமா என்றும் மறுபுறம் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 'நான் இல்லையென்றாலும் இந்திய அணியை ரஹானே சிறப்பாக வழிநடத்துவார். எங்கள் இருவருக்குள்ளும் சிறப்பான புரிதல் உள்ளது' என தெரிவித்துள்ளார். மேலும், 'பல தருணங்களில் நாங்கள் இருவரும் நம்பிக்கையுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து செயல்பட்டுள்ளோம். இந்திய அணியின் வலிமை குறித்து அவருக்கு நன்றாக தெரியும். ரஹானே தனது தனிப்பட்ட திறன் மற்றும் கேப்டன்ஷிப் மூலம் சிறப்பாக இந்திய அணியை தலைமை தாங்குவார்' என கோலி நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். 

 

இது தொடர்பான வீடியோ ஒன்றை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்