"ஃபுல் 'பார்ம்'ல இருக்காரு... ஆனாலும் இந்த ஒரு 'விஷயத்த' நெனச்சா கஷ்டமா இருக்கு.." 'கோலி'யை நினைத்து கலங்கிய 'ரசிகர்கள்'!! 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து அணி மிகக் கடினமான இலக்கை, 44 ஓவர்களில் எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

"ஃபுல் 'பார்ம்'ல இருக்காரு... ஆனாலும் இந்த ஒரு 'விஷயத்த' நெனச்சா கஷ்டமா இருக்கு.." 'கோலி'யை நினைத்து கலங்கிய 'ரசிகர்கள்'!! 'காரணம்' என்ன??

இதனால், இந்த தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளதையடுத்து, இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, தொடரை கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னதாக, இந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்த போது, தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருந்த போதும், கோலி, ராகுல், பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரால், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆதில் ரஷீத் (Adil Rashid) பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டிகளில், ரஷீத் பந்து வீச்சில், கோலி ஆட்டமிழப்பது இது 9 ஆவது முறையாகும். ஆனால், இதை விட, 66 ரன்களில் அவர் அவுட்டானதால், ரசிகர்கள் ஒரு விஷயத்தில் வருந்தி போயுள்ளனர்.

சர்வதேச போட்டிகளில், விராட் கோலி கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு சதமடித்து இருந்தார். அதன் பிறகு, பல தொடர்களில் கோலி சிறப்பாக ஆடி வந்தாலும் இதுவரை ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஐம்பது ரன்களுக்கு மேல் அதிக போட்டிகளில் அவர் அடித்த போதும், அவரால் சதத்தை நெருங்க இயலவில்லை.

அது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு சதத்தை அவர் அடித்தால், சர்வதேச போட்டிகளில் அதிக சதமடித்த ரிக்கி பாண்டிங் சாதனையும் சமன் செய்து, சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடிக்கலாம். ஆஸ்திரேலிய தொடர் ஆரம்பித்து, ஒவ்வொரு தொடரின் போதும், கோலி இந்த சாதனையை செய்வார் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

இன்றைய போட்டியிலும், ராகுலுடன் இணைந்து, சிறப்பாக ஆடிய போது, கோலி சதமடிப்பார் என எதிர்பார்ப்பு உருவாகியது. ஆனால், இறுதியில் அவர் 66 ரன்களில் அவுட்டானதும், ட்விட்டரில் ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்