'அம்பையரை குறை சொல்றது இருக்கட்டும்'... 'இத பத்தி மட்டும் பேச மாட்டீங்களா கோலி'... பொங்கியெழுந்த கிரிக்கெட் விமர்சகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணி வெற்றி பெற்றாலும் கேப்டன், முன்னாள், இந்நாள் வீரர்களுக்கு நடுவரைக் குறைகூறும் பழக்கம் மட்டும் போகவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

'அம்பையரை குறை சொல்றது இருக்கட்டும்'... 'இத பத்தி மட்டும் பேச மாட்டீங்களா கோலி'... பொங்கியெழுந்த கிரிக்கெட் விமர்சகர்கள்!

நேற்றைய போட்டியில் சூரிய குமார் யாதவுக்கு மலான் தரையில் பட்டுத்தான் கேட்ச் எடுத்தார், முதலில் கேட்ச் எடுத்த வீரருக்கு தான் ஒழுங்காகப் பிடித்தோமா இல்லையா என்று தெரியாது என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அதே வேளையில் நடுவர் ஏன் சாஃப்ட் சிக்னல் அவுட் என்று தெரிவிக்க வேண்டும் என்பதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. சாஃப்ட் சிக்னல் முறையை அகற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

இதற்கிடையே வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி, ''டெஸ்ட் தொடரிலும் கேட்ச் சர்ச்சை ஏற்பட்டது, ரகானே கேட்ச் பிடித்தார், ஆனால் சந்தேகம் எழுந்தது. கேட்சை பிடித்தார் அவர் ஆனால் தரையில் பட்டதா என்பது குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.  ஒரு அரைகுறை கேட்சில் களநடுவரின் சாஃப்ட் சிக்னல்தான் தீர்ப்பை தீர்மானிக்கிறது.

Virat Kohli on soft-signal controversy, Kohli reacts after the match

ஏன் நடுவர் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று கூறக்கூடாது. அதனால்தானே மேல் முறையீடு, டிவி அம்பயரிடம் செல்கிறோம். ஆட்டத்தை நேர்மறையாக நடத்த இந்த சுருக்கங்களை அயர்ன் செய்து சரி செய்ய வேண்டும். களத்தில் தெளிவு தேவை எங்களுக்கு'' என கோலி பேசியிருந்தார். இதற்கிடையே சூரியகுமார் யாதவுக்கு நாட் அவுட்டை அவுட் கொடுத்ததற்கு நடுவரைச் சாடும் விராட் கோலி, முன்னாள் வீரர்கள் ஆகியோர் இதே தொடரில் இதே டி20-தொடரில் விராட் கோலிக்கு ஸ்டம்ப்டு அவுட் கொடுக்காத போது, ஏன் வாயைத்திறக்கவில்லை.

Virat Kohli on soft-signal controversy, Kohli reacts after the match

அது கிளீன் அவுட், லைனில் கால் இருந்தால் அவுட், காலின் எந்த ஒரு பகுதியும் கிரீசுக்குள் இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வர்ணனையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையும் தெரிவித்தன. இதே சேவாக் ஆகட்டும், லஷமண் ஆகட்டும், யார் வேண்டுமானாலும் ஆகட்டும் ஏன் அப்போது மட்டும் ‘நடுவர் தீர்ப்பு’ ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது என்ற கருத்தில் அமைதி காக்கின்றனர்? இப்போது சூரியகுமார் தீர்ப்புக்கு எகிறுகின்றனர், என பல விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Virat Kohli on soft-signal controversy, Kohli reacts after the match

அதாவது நடுவர் தீர்ப்பு இருதரப்புக்கும் எதிராகச் செல்கிறது, என்ற உண்மையைப் பேச ஏன் மறுக்கின்றனர்? இந்திய அணி பாதிக்கப்பட்டால் மட்டும் சத்தம் போடுவது, அதே நேரத்தில் எதிரணிக்கு மோசமான தீர்ப்பு பாதித்தால், சுனில் கவாஸ்கர் உட்பட அனைவரும் ‘இங்கிலாந்து ஏன் அழ வேண்டும்?’ இங்கிலாந்து ஏன் புலம்ப வேண்டும்? என்று கேட்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதனால் இந்திய அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவுக்குத் தவறாக அவுட் கொடுக்கும்போது இவர்கள் கூறுவதெல்லாம் புலம்பல் இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், நடுவர் தீர்ப்பை விமர்சிக்கும் முன் கோலி, முன்னாள், இந்நாள் இந்திய வீரர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத்தாளர்கள்.

மற்ற செய்திகள்