இப்டி பண்ணதுக்கு.. கோலி'ய சஸ்பெண்ட் பண்ணுங்க.. வலுக்கும் எதிர்ப்பு.. இனி என்ன தான் நடக்கும்??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போட்டிக்கு நடுவே கோலி செய்த செயலால், அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்டி பண்ணதுக்கு.. கோலி'ய சஸ்பெண்ட் பண்ணுங்க.. வலுக்கும் எதிர்ப்பு.. இனி என்ன தான் நடக்கும்??

இந்தியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை, 2 - 1 என்ற கணக்கில், தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது.

தொடரை வென்று அசத்தல்

தொடர்ந்து, நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று, தென்னாப்பிரிக்க அணி, வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்திருந்தது. தொடர்ந்து , இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி, 198 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு, 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் தொடர்

இதனை நோக்கி ஆடிய அந்த அணி, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், அடுத்து நடைபெறவுள்ளது.

அவுட் கொடுத்த நடுவர்

இதனிடையே, இன்று நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின், நான்காவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, நடந்த சம்பவம் ஒன்று, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எல்கர் பேட்டிங் செய்த சமயத்தில், இந்திய வீரர் அஸ்வின் பந்து வீசினார். அப்போது, எல்கர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனதாக போட்டி நடுவர் அறிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள்

தொடர்ந்து, எல்கர் ரிவியூ செய்ய, மூன்றாம் நடுவரோ, பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்றதால், அவுட்டில்லை என அறிவித்தார். இதனைக் கண்ட இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, திடீரென பந்து எப்படி பவுன்ஸ் ஆகும் எனக்கூறி, போட்டி நடுவரிடம் முறையிட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல், '11 பேருக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது' என ராகுல் மூன்றாம் நடுவரின் முடிவை விமர்சனம் செய்தார்.

கோலியின் கோபம்

அதே போல, ஸ்டம்ப் மைக் அருகே சென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, 'உங்கள் அணி வீரர்களும் பந்தை சேதப்படுத்துகின்றனர். அதையும் கொஞ்சம் பாருங்கள். எதிரணி மீது மட்டும் கவனம் செலுத்தாமல், இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்' என கூறினார்.

விமர்சித்த கம்பீர்

இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி, கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ஒரு இந்திய கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என விராட் கோலியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கம்பீரைப் போல, பல முன்னாள் வீரர்களும், இந்திய அணி குறித்து  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி எல்லாம் பண்ணாதீங்க

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனும், கோலி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 'இந்திய அணியின் இந்த விவகாரத்தில், ஐசிசி நிச்சயம் தலையிட வேண்டும். களத்தில் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் கிடைக்காமல் போனால், நிச்சயம் நீங்கள் வெறுப்படைய தான் செய்வீர்கள். ஆனால், அதற்காக இப்படிப்பட்ட செயல்களில் எல்லாம் ஈடுபடக் கூடாது.

சஸ்பெண்ட் செய்யுங்கள்

ஒரு அணியின் கேப்டனே இப்படி தவறாக நடந்து கொண்டதால், ஐசிசி நிச்சயம் இது பற்றி விசாரிக்க வேண்டும். இதில் தலையிட்டு, கோலிக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என கோலி மீது, மிகவும் கடுமையான விமர்சனத்தை மைக்கேல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

கோலி சொல்வது என்ன?

 

இதனைத் தொடர்ந்து, போட்டிக்கு பின்னர், இந்த சர்ச்சை பற்றி பேசிய கோலி, 'அதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. களத்தில் என்ன நடக்கிறது என்பது, எங்களுக்கு தான் தெரியும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்து தற்போது பேசி, சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை. அது போட்டியின் ஒரு பகுதி தான். இப்போது அதுவும் முடிந்து விட்டது. நாங்களும் அதனைக் கடந்து வந்து விட்டோம்' என தெரிவித்துள்ளார்.

எதுவாக இருந்தாலும், கோலி மற்றும் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ள இந்த சம்பவம், பெரும்

VIRAT KOHLI, IND VS SA, MICHAEL VAUGHAN, DRS, CONTROVERSY

மற்ற செய்திகள்