"மேட்ச் தோத்தாலும் மனுஷன் வேற லெவல் தான்.." போட்டிக்கு பின்னர் கோலி செய்த செயல்.. "ஃபேன்ஸ் மனசுல நங்கூரம் மாதிரி நின்னுட்டீங்க"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்று கெத்தாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போதைய ஐபிஎல் தொடரின் நான்கு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்திருந்தது.
"இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..
இதனைத் தொடர்ந்து, நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், தங்களின் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது சிஎஸ்கே.
பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, சென்னனை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, இருபது ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் அதிரடியால், கடைசி 10 ஒவர்களில் 156 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி இருந்தது சிஎஸ்கே. உத்தப்பா 88 ரன்களும், ஷிவம் துபே 95 ரன்களும் எடுத்திருந்தனர்.
சென்னை அணிக்கு முதல் வெற்றி
தொடர்ந்து ஆடிய பெங்களுர் அணி, ஆரம்பத்தில் அடுத்ததடுத்து சில முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. நடுவே தினேஷ் கார்த்திக், சபாஷ் மற்றும் சுயாஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தாலும், 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால், 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது.
தடுமாறும் ருத்துராஜ்
இதனிடையே, போட்டிக்கு பின்னர் விராட் கோலி செய்திருந்த விஷயம் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் நெகிழ செய்துள்ளது. சென்னை அணியின் இளம் தொடக்க வீரரான ருத்துராஜ், கடந்த ஐபிஎல் சீசனில் 635 ரன்கள் அடித்து, அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். ஆனால், இந்த முறை அவர் ஆடியுள்ள ஐந்து போட்டிகளில் முறையே 0, 1, 1, 16 மற்றும் 17 ரன்களை அடித்துள்ளார்.
இதனால், ருத்துராஜின் பேட்டிங் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. மற்றொரு தொடக்க வீரர் உத்தப்பா தொடர்ந்து நன்றாக ஆடி வந்தாலும், ருத்துராஜ் நல்ல தொடக்கத்தை கொடுக்காமல் இருப்பது, சென்னை அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பாதித்து வருகிறது. இதனால், சென்னை அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ருத்துராஜின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கோலி செய்த விஷயம்
இனி வரும் போட்டிகளில், அவர் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நெருக்கடியும் உருவாகியுள்ளது. இந்நிலையில், தாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வரும் ருத்துராஜை சந்தித்து பேசினார் கோலி. ருத்துராஜின் தோளில் கை போட்டபடி, பேசிக் கொண்டிருந்த கோலி, நிச்சயம் பேட்டிங் தொடர்பான சிறந்த டிப்ஸ்களை அளித்திருப்பார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணி என்பதைத் தாண்டி, வருங்கால இந்திய அணியின் வீரர்களை சந்தித்து அவரிடம் கோலி பேசியுள்ள சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்