கேட்சை மிஸ் செய்த கோலி.. அடுத்த கணமே அஸ்வின், ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் நேற்று (30.10.2022) தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தனர்.
இருவரும் அரை சதமடித்திருந்த நிலையில், இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எட்டிப் பிடித்திருந்தது. இந்த நிலையில், கோலி கேட்ச் ஒன்றை தவற விட்டதும் அதற்கு அஸ்வின் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை அஸ்வின் வீசி இருந்தார்.
இந்த ஓவரில் மார்க்ரம் அடித்த பந்து, நேராக கோலி கைக்கு சென்றது. ஆனால், அந்த கேட்சை தவற விட்டதும் இந்திய வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பந்து வீசிய அஸ்வின் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஏமாற்றத்துடன் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) October 30, 2022
— Guess Karo (@KuchNahiUkhada) October 30, 2022
Also Read | "4 மணி நேரமா ரிப்ளை வரல".. சந்தேகடமைந்த தோழி செஞ்ச வினோத காரியம்.. இதுவல்லவோ Friendship..
மற்ற செய்திகள்