Watch: ‘அச்சச்சோ..!’ கொரோனா நேரத்துல ‘இதெல்லாம்’ பண்ணக்கூடாதே.. கோலி ரியாக்ஷனை பார்த்து சச்சின் போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலி பந்தில் எச்சிலை தடவிய சம்பவம் குறித்து சச்சின் ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் சீசனின் 19-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியின் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 42 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 53 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 43 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
What times! @imVkohli applies saliva on the cricket ball and immediately apologizes.
Covid, you happy? pic.twitter.com/4oAJtpFt9P
— Ketan | کیتن (@Badka_Bokrait) October 5, 2020
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது விராட் கோலி தெரியாமல் பந்தில் எச்சிலில் தடவி விட்டார். உடனே அவர் சிரித்துக்கொண்டே கையை தூக்கி மன்னிப்பு கேட்டார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பந்தில் எச்சில் தடவ கூடாது என ஐசிசி விதிமுறை விதித்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் இதுபோல் இரண்டு முறை எச்சில் தடவினால் அந்த அணிக்கு வார்னிங் கொடுக்கப்படும். மீண்டும் இதை செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும்.
What an incredible shot by @PrithviShaw there!
A million dollar reaction by @imVkohli after almost applying saliva on the ball.
Sometimes instincts takeover!😋
RCBvDC #IPL2020
— Sachin Tendulkar (@sachin_rt) October 5, 2020
இந்த நிலையில் விராட் கோலி பந்தில் எச்சில் தடவியது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்