VIDEO: இது எப்படி ‘நாட் அவுட்’ ஆகும்?.. கோபமாக அம்பயரிடம் போன கோலி.. சர்ச்சையை கிளப்பிய ‘Umpire's Call’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

VIDEO: இது எப்படி ‘நாட் அவுட்’ ஆகும்?.. கோபமாக அம்பயரிடம் போன கோலி.. சர்ச்சையை கிளப்பிய ‘Umpire's Call’!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தன. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 134 ரன்களும் எடுத்தன.

Virat Kohli loses cool as Joe Root survives with Umpire's Call

இதனைத் தொடர்ந்து விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 286 ரன்களை எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்கள இலக்காக நிர்ணயித்தது. இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களை எடுத்தது.

Virat Kohli loses cool as Joe Root survives with Umpire's Call

இதனை அடுத்து இன்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து பறி கொடுத்தது. இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Virat Kohli loses cool as Joe Root survives with Umpire's Call

இந்த நிலையில் இப்போட்டியின் நடுவே கேப்டன் விராட் கோலி அம்பயரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் காலில் பந்து பட்டுச் சென்றது. இதனால் விராட் கோலி அம்பயரிடம் எல்பிடபிள்யூ கேட்டார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். உடனே 3-வது அம்பயரிடம் கோலி ரிவியூ கேட்டார்.

அதில் ஜோ ரூட்டின் காலில் பட்ட பந்து நேராக ஸ்டம்பில் அடிப்பது போல் இருந்தது. அதனால் இதை அவுட் என அறிவிப்பார்கள் என இந்திய வீரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் Umpire's Call கொடுக்கப்பட்டதால், நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த கோலி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தினார். அம்பயரின் இந்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்