“கிரிக்கெட்டுல ஒரு ரொனால்டோ, விராட் கோலி தான்”.. புகழ்ந்து தள்ளிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலியை உலகின் முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோவுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘விராட் கோலி எப்போதும் பிட்னஸ் குறித்த அட்வைஸ் கொடுப்பார். பிட்னஸ் விஷயத்தில் அவர் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளார். என்னை பொருத்தவரை கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றே அவரை கூறுவேன். பிட்னஸ் என வரும் போது உலகில் யாருடன் வேண்டுமானாலும் கோலி ஒப்பிட தகுதியானவர். எப்போதும் கடினமாக விளையாடக்கூடிய அவரிடம் இருந்து நிறைய பானுகா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
30 வயதான இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்சே, பிட்னஸ் பிரச்சனை காரணமாக இலங்கை அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்த வந்தார். அதனால் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் பலர் அவரை தொடர்பு கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வாபஸ் வாங்கினார். இந்த சூழலில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை எடுத்தது.
சமீபத்தில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பானுகா ராஜபக்சே தனது முதல் போட்டியை விளையாடினார். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. அப்போட்டியில் பானுகா ராஜபக்ச 22 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஒடியன் ஸ்மித், ஷாருக் கான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 206 ரன்கள் எடுத்து பஞ்சால் அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்