'சிக்ஸ்' அடிச்சதும் தோனி பெயரை சொல்லி கத்திய கோலி.. "அடேங்கப்பா, இதுக்காக தானா?"..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதலில் நடந்த டி 20 போட்டியை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
Also Read | Nepal Plane Crash : விமான விபத்தில் 72 பேர் பலி.. பயணி எடுத்த லைவ் வீடியோவில் பதிவான திக் திக் நிமிடங்கள்!
இதற்கடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (15.01.2023) நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பட்டையைக் கிளப்பி இருந்தார். முதல் ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்த நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்திருந்தார்.
அது மட்டுமில்லாமல், 150 ரன்களைக் கடந்த கோலி, 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 110 பந்துகளில், 13 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் இந்த ரன்னை கோலி எட்டி இருந்த நிலையில், அவர் அடித்த அசாத்திய சிக்ஸர் ஷாட்கள், பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 73 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. எந்த அணியும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் வென்றதில்லை என்ற நிலையில், அதனை மாற்றியமைத்து வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த நிலையில், தான் சிக்ஸ் அடித்ததும் தோனியை குறிப்பிட்டு ஒரு வார்த்தையை பேசி உள்ளார் விராட் கோலி. ஒரு நாள் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி, 44 ஆவது ஓவரில் இலங்கை பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி இருந்தார். இது 97 மீட்டர் தூரம் வரை சென்றிருந்தது.
மேலும் இந்த சிக்ஸரை ஹெலிகாப்டர் ஷாட் போல அடித்திருந்தார் விராட். அதாவது, கிரீஸில் இருந்து வெளியே வந்த கோலி, ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு பெயர் போன தோனியை போலவே பந்தை வெளியே அடித்திருந்தார். இந்த சிக்ஸை அடித்து முடித்ததும் மறுபக்கம் நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் அருகே சென்று, "மஹி ஷாட்" என தோனியை குறிப்பிட்டு உற்சாகத்தில் கத்தவும் செய்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும் தோனி மற்றும் கோலி ஆகியோரிடையே உள்ள நட்பு என்பது அதிக பிணைப்புள்ளதாகும். பல இடங்களில் தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை கோலி பகிர்ந்து வந்தார். அப்படி இருக்கையில், தற்போது சிக்ஸர் அடித்ததும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை குறிப்பிட்டு கோலி சொன்ன வார்த்தை அதிக கவனம் பெற்று வருகிறது.
He said "Mahi Shot" in the end 😭♥️#Mahirat 🥺♥️#KingKohli | #ViratKohli𓃵@imVkohli @msdhoni #GOAT𓃵 pic.twitter.com/kKXy3UH0Lo
— Manoj Kumar (@its_manu01) January 15, 2023
Also Read | "விராட் அடிச்ச அந்த ஒரு அடி".. மிரண்டு பார்த்துட்டு உற்சாகத்தில் ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்!!
மற்ற செய்திகள்