கேப்டன் பதவியில இல்லைனாலும்.. கோலி இதை பண்ண மட்டும் எப்பவும் தவறமாட்டார்.. உருக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி இன்று (19.01.2022) போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மற்றும் டி காக் மற்றும் ஜன்னேமான் மாலன் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஜன்னேமான் மாலன் அவுட்டானார். இதனை அடுத்து 26 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் வீசிய ஓவரில் போல்டாகி டிக் காக் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஐடன் மார்க்ராமும் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா (110 ரன்கள்) மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (129* ரன்கள்) ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.
இந்த நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தியதும் வேகமாக ஓடிவந்த அஸ்வினை விராட் கோலி இறுக்கமாக கட்டியணைத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் சக வீரர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்வதில் இருந்து விராட் கோலி எப்போது மாற்ற மாட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Kohli 😂 not mood to leave ashwin ? pic.twitter.com/JXWbC7zTYi
— `` (@KohlifiedGal) January 19, 2022
You can't keep Ravichandran Ashwin out of the Game🔥 Quinton de Kock goes for 27.#SAvIND pic.twitter.com/MCDXamkyJl
— Over Thinker Lawyer 🇵🇰 (LQ💚) (@Muja_q_Nikala) January 19, 2022
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாடியிருந்தார். அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வந்தார். இந்த சூழலில் 5 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்