"நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

RCB மகளிர் அணிக்கு விராட் கோலி அறிவுரை வழங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

"நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!

மகளிர் ஐபிஎல்

இந்தியாவில் முதன் முறையாக இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. RCB மகளிர் அணியில் ஸ்ம்ரிதி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலீஸ் பெர்ரி, ஹீதர் நைட் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக கருதப்படுகின்றனர்.

இருப்பினும், மகளிர் RCB அடுத்தடுத்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை முதல் இடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த RCB அணி 4 ஆம் இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Virat Kohli gives a pep talk to RCB women team Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

கோலியின் அட்வைஸ்

இந்நிலையில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும் RCB ஆடவர் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மகளிர் அணிக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அப்போது பேசியுள்ள கோலி,"நான் 15 வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். நான் இன்னும் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அது ஒவ்வொரு வருடமும் உற்சாகமாக இருப்பதில் இருந்து என்னைத் தடுக்காது. அவ்வளவுதான் நான் செய்யவேண்டியது . நான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் என்னால் செய்யக்கூடிய முயற்சி இதுதான்"

Virat Kohli gives a pep talk to RCB women team Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

நாம் வென்றால், மகிழ்ச்சி. இல்லை என்றால், ஐபிஎல்லில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், நான் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன் என்று நினைத்துக்கொள்ளகூடாது. எனவே இப்போது எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை விட உங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றி எப்போதும் சிந்தியுங்கள். அதற்கு எப்பொழுதும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. அது ஒருவேளை இதைவிட மோசமாக இருக்கலாம். நாங்கள் ஐபிஎல்லை வெல்லவில்லை என்பதுதான் உண்மை, ஆனால் உலகில் சிறந்த ரசிகர்கள் எங்களிடம் இருப்பதாக நான் இன்னும் உணர்கிறேன்.

Virat Kohli gives a pep talk to RCB women team Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

RCBக்காக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருப்பது இதனால் மட்டுமே. இது எங்கள் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு கோப்பை கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் 110% உழைப்பை கொடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | ஒரு வாரமா பாசமா வளர்த்த யானைக்குட்டி.. பிரிஞ்சு போற நேரத்துல கண்ணீர்விட்ட அதிகாரி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

CRICKET, VIRAT KOHLI, RCB WOMEN, RCB WOMEN TEAM

மற்ற செய்திகள்