‘11 ஆண்டுகளாக தக்க வைத்த பெருமை’... ‘கொரோனா பாதிப்பால்’... ‘இந்த வருஷம் மிஸ் பண்ணிய ரன் மெஷின்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலி 2020 ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன்பின், இந்திய அணிக்காக தொடர்ச்சியான பங்களிப்பை அளித்து வரும் இவர், இதுவரை 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 சதங்கள், 60 அரை சதங்கள் உட்பட 12,040 ரன்கள் குவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில், தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி, இம்மைல்கல்லை அதிவேகமாக எட்டியவீரர் என்ற சாதனையையும் 17 வருடங்களுக்குப் பிறகு சச்சினிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
இரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வந்த போட்டியே இந்திய அணி இந்தாண்டில் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியாகும். இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, இவ்வருடத்தில் 9 இன்னிங்ஸில் விளையாடி 431 ரன்கள் குவித்துள்ளார். இந்த வருடத்தில் அவர் ஒரு சதம் கூட பதிவுசெய்யாததையடுத்து, 11 ஆண்டுகளாகத் தக்க வைத்த பெருமையை விராட் கோலி இழந்துள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனைத்து ஆண்டிலும் அவர் சதத்தைப் பதிவு செய்திருந்தார். விராட் கோலி ஒரு வருடத்தில் ஒரு சதம் கூட அடிக்காதது என்பது அறிமுகமான 2008-ம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரத ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மற்ற செய்திகள்