"விராட் கோலி தான் ஃபேவரைட்".. படிக்கிறது 6 ஆம் வகுப்பு.. ஆனா அடிக்குற ஷாட் எல்லாம் 'தரம்' 🔥.. வைரலாகும் லடாக் சிறுமி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபொதுவாக, கிரிக்கெட், சினிமா, அரசியல் உள்ளிட்ட துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு என்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
Also Read | "கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு".. விருந்துக்கு போன இடத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!
இப்படி பிரபலங்களை பின்பற்றுபவர்கள், தங்களின் அன்றாட வாழ்வில் பல விஷயங்களில் அவர்களின் தாக்கம் இருக்கும் வகையில் தான் செயல்படுவார்கள்.
உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் அந்த விளையாட்டில் சாதித்த பிரபலங்களை பின்பற்றி அவர்களை போலவே ஆக வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியின் தீவிர ரசிகை ஒருவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ, பலரையும் பிரம்மிப்பு அடைய வைத்துள்ளது.
லடாக் பகுதியை சேர்ந்தவர் மக்சூமா (Maqsooma). இவர் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை ஆவார். கோலியின் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து ரசிப்பதுடன் மட்டுமில்லாமல், இந்த வயதிலேயே பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார் மக்சூமா. தனது பள்ளியில் மக்சூமா கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை லடாக் பள்ளிக்கல்வி இயக்குநரகம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் பேசும் மக்சூமா, "எனது தந்தை என்னை வீட்டில் கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்கிறார். பள்ளியிலும் நான் கிரிக்கெட் விளையாட ஆசிரியர்கள் ஆதரவு தருகின்றனர். விராட் கோலியை போல விளையாட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரும் அவர் தான். நான் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். மேலும் ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது எப்படி என்று நான் கற்று வருகிறேன்" என மக்சூமா தெரிவித்துள்ளார்.
அதே போல, அதிரடியாக சில கிரிக்கெட் ஷாட்களை மக்சூமா ஆடும் வீடியோக்களும் இதில் இடம்பெற்றுள்ளது. சிறு வயதிலேயே அனைவரின் ஆதரவுடன் விராட் கோலி போல ஆட வேண்டும் என்ற சிறுமியின் கிரிக்கெட் ஆடும் வீடியோக்கள் தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
My father at home and my teacher at school encourage me to play cricket. I'll put all my efforts to play like @imVkohli Maqsooma student class 6th #HSKaksar pic.twitter.com/2ULB4yAyBt
— DSE, Ladakh (@dse_ladakh) October 14, 2022
மற்ற செய்திகள்