‘மேட்ச் டிக்கெட் கேட்ட நண்பர்களுக்கு விராட் அளித்த பதில்..’ செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றதில்லை என்ற வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பான சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த சுவாரஸ்யமான பதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், “உங்களுடைய சக முன்னாள் வீரர் ஷேவாக், பாகிஸ்தான் போன்ற அணிகளுடன் விளையாடுவது கூட எளிதானது. ஆனால், கிரிக்கெட் போட்டிகளுக்கு பாஸ் டிக்கெட் கேட்டு வரும் கோரிக்கைகளை சமாளிப்பதுதான் கடினம் எனத் தெரிவித்திருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிரித்துக்கொண்டே கோலி, “இரண்டு அல்லது மூன்று டிக்கெட்டுகளை மட்டுமே எங்கள் குடும்பத்தினருக்காக நாங்கள் பெற முடியும். பாஸ் டிக்கெட் கேட்டு எங்களிடம் வரும் கோரிக்கைகளைச் சமாளிப்பது கடினம்தான். ஏனென்றால் ஒருவருக்கு ஏற்பாடு செய்தால் அந்தத் தகவல் அவரிடமிருந்து மற்றவருக்கு என பரவிக்கொண்டே போகும். என்னுடைய நண்பர்கள் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்பட்டபோது கூட, வீட்டிலேயே அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டுதான் வந்தேன்” என பதிலளித்துள்ளார்.
Virat Kohli "Don't even ask me for a ticket or a pass for this match" #INDvPAK #CWC19 pic.twitter.com/6TMXEoI41D
— Saj Sadiq (@Saj_PakPassion) June 15, 2019